உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்கள்

உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்கள்

கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி முதல் கல்லூரியில் 2ம் மற்றும் 3 ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வருகை தந்தனர். பின்னர் கல்லூரி நுழைவாயிலில் மாணவ, மாணவியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை சரிபார்த்தபின் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யப்பட்டு கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் புதிதாக கல்லூரி வரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn