மத்திய அரசையும், பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், லகிம்பூர் கேரி பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராம மான பன்வீர்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்தார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.கவினரின் வாகன அணி வகுப்பு வந்தது. இதில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால், அங்கு வன்முறை வெடித்ததில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த லகிம்பூர் கேரி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லக்கிம்பூர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுசாமி, மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் மேயர் சுஜாதா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி, குமார், மாவட்ட பொதுச்செயலாளர் திலகர், பஜார், மைதீன், ஐஎன்டியுசி ரயில் சரவணன், இளைஞர் காங்கிரஸ் விமல், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி தொழிற்சங்கம் அக்கீம், வார்டு தலைவர்கள் வெல்லமண்டி பாலசுப்ரமணியன், முகமது ரபிக், மாரியப்பன், மார்க்கெட் சம்சுதீன், தேவா தளம் தலைவர் அப்துல் குத்தூஸ், மகளிரணி ஜெகதீஸ்வரி, சண்முகம் ஆனந்த், அருண், தினேஷ், ஜீவா, ஆட்டோ கார்த்தி, மன்சூர், அல்லூர் பிரேம், செய்தி தொடர்பாளர் இருதயராஜ் மற்றும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn