எல்லா ஆட்சியிலும், ஏன் மன்னர் ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை நடைபெற்றது - முத்தரசன் திருச்சியில் பேட்டி

எல்லா ஆட்சியிலும், ஏன் மன்னர் ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை நடைபெற்றது - முத்தரசன் திருச்சியில் பேட்டி

திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை எங்களுக்கு வேலை வேண்டும் என்று முழக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி தமிழகத்தில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் இறுதி நிகழ்வாக வருகின்ற 2ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை என்பது அதிகமாக உள்ளதாகவும், மத்திய அரசு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தது. இன்று வரை அந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றாமல் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசாங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார்.

பாஜக ஒரு புல்லுருவி என்பதை இந்த நாடு அறிந்திருக்கிறது. அதை விரைவில் அகற்றுவதே எங்களின் நோக்கம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. எல்லா ஆட்சியிலும் ஏன் மன்னர் ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை நடைபெற்றது. அதிமுக காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்களாவில் கொலை நடைபெற்றது. இந்த ஆட்சியிலும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது. அரசு அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. அதிமுக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பாரதிய ஜனதா கட்சி உத்தரவுவதை செய்யும் நிலையில் அதிமுக உள்ளது. அதிமுக போல் எங்களுக்கு யாரும் உத்தரவிட மாட்டார்கள்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொடரும். இருக்கும், இருக்கிறது எங்களுடைய கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி. தமிழ்நாடு அரசின் கல்வித்துறை சிறப்பாக இருக்கிறது மாணவர்கள் அதிகமானோர் தேர்வு எழுதாதது கவலைக்குரிய விஷயம். உடனடியாக அரசு அதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn