போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே துவக்குடி போக்குவரத்து அரசு பணிமனையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் அடாவடியை கண்டித்தும் கிளை மேலாளரின் நடவடிக்கையை கண்டித்தும் எஐடியுசிதொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்ட வாயிற்கூட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு துவாக்குடி பணிமனை கிளை தலைவர் சுந்தரவேலு தலைமை வைத்தார். நிர்வாகிகள் முத்து செல்வம், பழனிச்சாமி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

நிர்வாகிகள் நேருதுரை,சுப்ரமணியன் ஆகியோர் ஆளுங்கட்சி நிர்வாகிகளையும் பணிமனை மேலாளர் பால் கருணாகரன் நடவடிக்கையை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இதில் துவாக்குடி பணிமனையில் உள்ள பேருந்தில் வேலை பார்த்த துவாக்குடி கிளை செயலாளர் பனிமலையில் கழிவறைகள் சுத்தமில்லை என்று கூறியதற்காக சட்ட விரோத பதவி இறக்கம்செய்த பணிமனை கிளை மேலாளர் பால் கருணாகரன் கண்டித்தும்துவாக்குடி கிளையின் தரைதளத்திற்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி சரிசெய்ய வேண்டும்

தொழிலாளர்களிடம் விடுப்பு விண்ணப்பம் நிர்வாகிகள் வாங்கி கொடுக்கும்போது டிராபிக் கிளார்க் தொழிற்சங்க நிர்வாகியை அவமதிக்கும் போக்கை கைவிட வேண்டும்அவசர விடுப்புக்கு தகவல் யாரிடம் கொடுப்பது என தெளிவுபடுத்த வேண்டும்உயர்நீதி மன்ற உத்தரவின்படி ஓட்டுனர், நடத்துனர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்தகூடாது.

 கிளையின் கழிவறையில் நீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் நீண்டகாலமாக சுத்தம் செய்யப்படாமல் உள்ள செப்டிக் டேங் காலமாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளையில் உள்ள பேருந்துகளுக்கு பிரேக் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பயன்படுத்தும் கேண்டீன் வசதிகளை சீர்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn