சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரால் மக்கள் அவதி
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மெயின் ரோடுகளில் பாதாள சாக்கடை திட்டத்தினால் சாக்கடைகள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் ஒரே நேரத்தில் வேலையைத் செய்வதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராமலிங்க நகரைச் சேர்ந்த கண்ணன் கூறிய போது... கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் வேகமாக நடப்பதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை. இரண்டு புறமும் ஒரே நேரத்தில் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்று காலை கூட ஒரு ஆம்புலன்ஸ் செல்வதற்கே கிட்டதட்ட அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
சாலையில் சாக்கடை நீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது சாலைகளில் நடந்து செல்பவர்களும் வாகனங்களை ஓட்டி செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பணியாளர்களிடம் சென்று கேட்டால் இதைப்பற்றி மேலிடத்தில் பேசிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் பணி நடைபெறும் இடத்தில் மாநகராட்சியை சேர்ந்த ஒரு அலுவலர்களும் இல்லை.
பணிகள் மேற்கொள்வதற்காக சாலைகளிலேயே தேவையான பொருட்களையும் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி குறுகிய சாலைகளில் ஒரு வண்டியை தவிர ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலையில் இவ்வாறு செய்வது மக்களை அவதிக்குள்ளாக்கிறது.
காலையில் பணிக்குச் செல்பவர்கள் சாலையை கடக்கும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கூட காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு நடைமுறையால் மக்கள் நடமாட்டம் இல்லாத போது கூட இதை செய்தால் மக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல் வேலையும் மிக விரைவாக செய்து முடிக்கலாம் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu