போதை மாத்திரைகளை விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

போதை மாத்திரைகளை விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி கடந்த (13.05.2024)-ந் தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகில் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பாண்டி (எ) வீரமுத்து (27), த.பெ.வெங்கடேசன் மற்றும் இரண்டு எதிரிகளை கைது செய்து, எதிரிகளிடமிருந்து 100 Tentadol போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரவுடி பாண்டி (எ) வீரமுத்து என்பவர் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் வழிப்பறி செய்தததாக 4 வழக்குகளும், அடிதடியில் ஈடுப்பட்டதாக 2 வழக்களும் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 1 வழக்கு, தில்லைநகர் காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கு உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, ரவுடி பாண்டி (எ) வீரமுத்து என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரியின் மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision