உயர் மின்னழுத்த கோபுரம் கீழே விழும் அபாயம் - கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

உயர் மின்னழுத்த கோபுரம் கீழே விழும் அபாயம் - கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

திருச்சி முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரியில் 31 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 75,000 கன அடி நீரும் செல்கிறது. திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனையின் 200 மீட்டர் உடைந்துள்ளது

அதன் அருகே உள்ள உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் உள்ளதால் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தயார் நிலையில் தீயணைப்புத் துறையினர் மின்சாரத் துறையினர் காவல் துறையினர் உள்ளனர். 

மாற்றுப்பாதையாக, திருச்சி கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள திருவானைக்காவல் பகுதியையும், வடகரையில் உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக போக்குவரத்து பயன்பாட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொள்ளிடம் (நேப்பியர்) பாலத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision