சிறுவர்களுக்கான விளையாட்டு விழா

சிறுவர்களுக்கான விளையாட்டு விழா

திருச்சி ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக புனித திருச்சிலுவை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் டாக்டர்.திரவிய கிளாடினா கலந்து கொண்டு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

விழாவில் பள்ளியின் தலைவர் கோபிநாதன், துணை தலைவர் லட்சுமி பிரபா கோபிநாதன், இயக்குனர் வரதராசன், கல்வி ஆலோசகர் மலர்விழி, முதல்வர் நளினி, துணை முதல்வர் ஆரோக்கிய ரீனா, நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision