மணப்பாறை அருகே களை கட்டும் ஜல்லிக்கட்டு போட்டி- 650 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே களை கட்டும் ஜல்லிக்கட்டு போட்டி- 650 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குளத்தூராம்பட்டியில் புனித சூசையப்பர் ஆலய திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது. இப்போட்டியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 650 காளைகள், 300 காளையர்கள் களம் காணுகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குளத்தூராம்பட்டியில் புனித சூசையப்பர் ஆலய திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது. இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 650-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர்.

போட்டியினை  பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆலயத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட  மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. 25 தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர்.

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள், ரொக்க பணம் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn