மாவட்ட தொழிற் பழகுநர் மேளா - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட தொழிற் பழகுநர் மேளா - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறும் தொழிற் பழகுநர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் உதவித் தொகையில் 25% (அ) ரூ.1500/- (இதில் எது குறைவோ)-ஐ தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி ஊக்குவிப்பு (NAPS) திட்டத்தின் கீழ் மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கி வருகிறது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தொழிற் பழகுநர் பயிற்சி ஊக்குவிப்புத் (NAPS) திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இரண்டு/நான்கு சக்கர வாகன சர்வீஸ் சென்டர்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் ஐடிஐ படித்து முடித்த மாணவ, மாணவிகளை தொழிற் பழகுநர்களாக தங்கள் நிறுவனத்தில் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் தொழிற பழகுநர் சேர்க்கை முகாம் திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் ‘மாவட்ட தொழிற் பழகுநர் மேளா” எதிர்வரும் 11.10.2021 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில் திருச்சி மாவட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு
முன்னரே NAPS திட்டத்தின் கீழ்பதிவு செய்துள்ள நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தொழிற் பழகுநர்கள் எண்ணிக்கை விவரங்களை dadtrichy@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவித்து தங்கள் வருகையினை உறுதி செய்து கொள்ளுமாறு, மேலும் NAPS
திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட திறன்பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை 8508508274 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn