கல்லூரி உதவி பேராசிரியர் நகையை பறித்து சென்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது

கல்லூரி உதவி பேராசிரியர் நகையை பறித்து சென்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது

பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீ.கார்னர் அருகில் உள்ள வேகத்தடை அருகே தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூன்று நபர்களில் ஒருவர் அவரது தங்க செயினை பறித்து சென்றதாக கல்லூரி பேராசியர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சுப்ரமணியபுரம், அண்ணாநகரைச்சேர்ந்த அகஸ்டின் கெவின் வயது 21, த.பெ. நவீன்ராஜ் என்பவரை கைது செய்து, கடந்த 22.06.2023-ந்தேதிநீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிரி அகஸ்டின் கெவின் என்பவர் மீது பொன்மலை காவல்நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறித்து சென்றதாக 2 வழக்குகளும், கே.கே.நகர் காவல்நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒரு வழக்கும், கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்ததாக ஒரு வழக்கும், கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் செல்போன் பறித்ததாக ஒரு வழக்கு உட்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது

எனவே, எதிரி அகஸ்டின் கெவின் என்பவர் தொடர்ந்து திருட்டு மற்றும் செல்போன் பறித்து செல்லும். செயல்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில்தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டுபொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சிமாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியைகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைதொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்புசட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அ டைக்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision