திருச்சி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு

திருச்சி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 பிரிவு 12(1) (சி)ன் படியும், தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன் விதி 8 மற்றும் 9ன் படியும், அனைத்து தனியார் சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (L.K.G / 1 Std) குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டு அதன்படி வருடம் தோறும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் (2023 - 2024) ஆம் கல்வியாண்டில் RTE 25% சேர்க்கைக்கான கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

1. திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் உள்ள 292 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன் / மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நர்சரி-பிரைமரி பள்ளிகள்) நுழைவு நிலை வகுப்பில் (LK.G / I Std.) 2566 இடங்கள் சுவுநு 25% இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2. தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011 விதி எண்,4(1)ன்படி, எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் (இருப்பிடம்) என்பது 1 கிலோ மீட்டர் ஆகும்.

3. சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் (20.04.2023) முதல் (18.05.2023) வரை இணையவழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

4. மேலும், முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக்கல்வி அலுவலர் / அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மைய அலுவலகங்களில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.

5. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் SC, SC(A),ST, MBC, DNC, BC, BCM பிரிவினரும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவின் கீழ்

1) ஆதரவற்ற குழந்தை (Orphan)

2) HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தை

3) மூன்றாம் பாலினத்தவர் (Transgender)

4) துப்புரவு தொழிலாளியின் குழந்தை (Child of Scavenger)

5) மாற்றுத் திளனாளியாக இருக்கும் குழந்தை (Differently Abled Child) உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம் 

6) நலிவடைந்த பிரிவின் கீழ், ஆண்டு வருமானம் இரண்டு இலட்சத்துக்கும் கீழ் பெறும் அனைத்துப்பிரிவினரும் சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.

7) விண்ணப்பிக்கும் சமயங்களில், பதிவேற்றம் செய்யும் பொருட்டு, குழந்தையின் புகைப்படம், பிறப்புச்சான்று a) Birth Certificate) b) Hospital / Auxillary and Midwife Register அல்லது c) Anganwadi Record அல்லது d) Declaration through an affidavit of the age of the child by the Parent / Guardian பெற்றோரின் வருமானச் சான்று, இருப்பிடச் சாதிச்சான்று, ஆதார் அட்டை முதலான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்று, 

8) Family card, Voter ID Card, Aadhaar ID Card, Driving License, Bank Pass Book. Telephone Bill, PAN Card, Certificate of Residence issued by VAO, ID Card issued by State Govt./ Central Govt. / Public Sector Undertakings இருப்பிடத்தினை நிரூபிக்கும் மேற்காணும் சான்றுகளில் ஏதேனும் ஒரு சான்றினை விண்ணப்பிக்கும் பொழுது பதிவேற்றம் செய்ய பயன்படுத்தலாம்.

9) LKG வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் (01.08.2019) முதல் (31.07.2020) க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் (01.08.2017) முதல் (31.07.2018) க்குள் பிறந்திருக்க வேண்டும். மேற்கண்ட தகவல்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn