திருச்சி மத்தியசிறையில் போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மீட்பு மையம்
திருச்சி மத்தியசிறையில் “சீர்திருத்த சிறகுகள்” என்ற திட்டத்தின் கீழ் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர்கள், இச்சிறையில் சிறைவாசிகளாக அனுமதிக்கப்படும் நேர்வில், அவர்களை போதைப்பொருட்கள் பயன்படுத்துவது நிறுத்தம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கு, ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டி,
போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மீட்பு மையத்தை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, சரக துணைத்தலைவர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். வெளிஉலகில் பெரும்பாலோர் குடிப்பழக்கம் மற்றும் போதை பழக்கத்தில் அடிமைப்பட்டவர்கள் தங்களது காயநிளைவை இறந்து போதையில் குற்றசெயலில் ஈடுபடுவது வழக்கம்.
அவ்வாறு குற்ற செயலில் ஈடுபட்டு சிறைக்குள் அனுமதிக்கப்படும் சிறைவாசிகள் சிறைக்குள் இருக்கும் காலங்களில் அவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதை பழக்கத்திலிருந்து விடுபட உரிய வழிமுறைகளும், பயிற்சிகளும்
சிகிச்சையும் அளிக்கப்படுவதால் அந்த சிறைவாசிகள் மீண்டும் குற்றசெயலில் ஈடுபடாமல் தடுக்க முடியும். இதனால், நாட்டில் குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற உயரிய சீர்திருத்த நோக்கத்துடன் இம்மையம் செயல்படும் என்பதில் ஐயமில்லை.
இந்த மீட்பு மையத்தில் மனநல மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் சிறைக்கண்காணிப்பாளர் ஆண்டாள் விழாவிற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தார். இதில் சிறை மருத்துவர்கள் ராஜ்மோகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision