மூனே முக்கால் கோடி பணத்தை திருப்பி கேட்ட சிவகாசி ஜெயலட்சுமியை மிரட்டிய எல்பின் ஆதரவாளர்கள் - போலீஸ் குவிப்பு

மூனே முக்கால் கோடி பணத்தை திருப்பி கேட்ட சிவகாசி ஜெயலட்சுமியை மிரட்டிய எல்பின் ஆதரவாளர்கள் - போலீஸ் குவிப்பு

திருச்சி மன்னார்புரம் அருகே எல்பின் என்ற நிதி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளுக்கும் அங்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யப்படும் பணம் பத்தே மாதத்தில்  இரட்டிப்பாக தரப்படும் என இந்த (Elfin) எல்பின் நிறுவனம் ஆசைவார்த்தை கூறி அதன் அடிப்படையில் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்
 இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது.


இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு அந்த நிறுவனம் பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால் முதலீடு செய்த பொதுமக்கள் பலரும் அந்நிறுவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கொரோனாவை காரணம் காட்டி அந்நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூட்டப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது . ஆனாலும் அந்த வாக்குறுதி அடிப்படையில் பணம் தரப்பட வில்லை.

இந்தநிலையில் கடந்த 2004 - 2005ஆம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட காவலர் சிவகாசி ஜெயலட்சுமி எல்பின் நிறுவனத்தில் 3.75 கோடி முதலீடு செய்திருப்பதாகவும், இதுநாள் வரை ஒரு பைசா கூட திருப்பித் தரப்படவில்லை என குற்றம்சாட்டி மன்னார்புரம் இந்நிறுவன அலுவலகம் முன்பு 3 நாட்களாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் கண்டோன்மெண்ட் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.  உடன்பாடும் எட்டப்படாத நிலையில் தற்போது அவர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். தான் முதலீடு செய்த பணம் தன் கைக்கு திரும்ப வரும் வரை போராட்டத்தை விடப்போவதில்லை எனக் கூறி எல்பின் அலுவலகம் வாசலிலேயே அமர்ந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவகாசி ஜெயலட்சுமியிடம் எல்பின் நிறுவன ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை 10க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஆனால் தான் முதலீடு செய்த பணத்தை திருப்பி தந்ததால் இங்கிருந்து செல்வேன் என கூறிய சிவகாசி ஜெயலட்சுமியை எல்பின் ஆதரவாளர்கள் மிரட்டினர்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு இருந்த போலீசார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். காவல் துறையினர் முன்பு சிவகாசி ஜெயலட்சுமியை எல்பின் ஆதரவாளர்கள் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW