திருச்சி முக்கிய சாலையை குப்பை கிடங்காக மாற்றும் மாநகராட்சி

திருச்சி முக்கிய சாலையை குப்பை கிடங்காக மாற்றும் மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி வீடு வீடாக முன்பெல்லாம் குப்பைகளை சேகரித்து வந்தது. அது ஒரு கட்டத்தில் பெரிய ஹோட்டல்கள், மால்கள்  போன்றவைகளில் அவர்களே குப்பைகளை மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும் எனவும் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வீடுகளிலேயே குப்பைகளை மறுசுழற்சி செய்யலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனையும் செயல்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனாலும் குப்பைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் அரியமங்கலம் குப்பை கிடங்குக்கு ஓரளவு குப்பைகளை கொண்டு சென்றனர். தற்போது அங்கேயும் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று முடிவெடுத்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அதற்கான மாற்று யோசனையில் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அங்கு உள்ள குப்பைகளை அகற்ற திட்டங்களை தீட்டி வைத்துள்ளனர்.

ஆனால் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கும் குப்பைகளை தற்போது திருச்சியின் முக்கிய பகுதிகளான பீமநகர், ஹீபர் ரோடு,யானைக்கட்டி மைதானம்  உள்ளிட்ட பகுதிகளில் சாலையிலேயே குப்பை கிடங்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உருவாகி வருகிறது. பக்கத்து தெருவில் சேகரிக்கப்படும் குப்பைகளை அது அடுத்த இரண்டு தெருவில் ஒரு மூலையில் வந்து நியாயவிலைக்கடை முன்னதாக அருகிலேயே குப்பையை கொட்டி பெரிய குப்பை கிடங்காக மாற்றி வருகின்றனது.

தற்போது கோவிட் தொற்று இரண்டாம் அலையில் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இந்த நிலையில் நகரின் முக்கிய பகுதியில் இக்குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதும் மேலும் நோய் தொற்று ஏற்படும் நிலையும் உருவாகி உளளது.

ஒருகாலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மை நகர பட்டியலில் முன்னேறி வந்தது. தற்பொழுது சாலை முழுவதும் குப்பைகள், பொதுமக்களிடம் சேகரிக்கும் குப்பைகளையும்  அந்த வாகனமே சாலையில் குப்பைகளை கொட்டி விட்டு செல்வதும் அரங்கேறி வருவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் முன்வைத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr