நாட்டு மாட்டு நெய் உற்பத்தியில் அசத்தும் பெண்!

நாட்டு மாட்டு நெய் உற்பத்தியில் அசத்தும் பெண்!

திருச்சி காட்டூரைச் சேர்ந்த வேலாயுதம் திவ்யா, என்னுடைய அப்பா ரயில்வே பணியில் பணியாற்றியவர். விவசாயத்தின் மீதுஆர்வம் இருந்ததால், வேலையை விட்டு விட்டு விவசாயத்தை தொடங்கினார். இன்று மாடித்தோட்டம் விவசாயம் என்று பிஸியாக இருக்கிறார். எம் பி ஏ முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.

இது இல்லாமல் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணி பால் விற்பனை செய்யலாம் என்று எண்ணினேன். அப்போது நாட்டு மாடுகள் பற்றி தெரிந்து கொள்ள தொடங்கிய போது தான் நாட்டு மாட்டு நெய்யின் மகத்துவம் புரிந்தது எனவே அதனை செய்யலாம் என்று முடிவு செய்தேன். https://instagram.com/irudhayaa_a2_ghee?igshid=MTA2NDdkNWE= தற்போது, பாலில் இருந்து க்ரீம் எடுத்து தயாரிக்கிற நெய்தான், அதிகமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நாங்கள் பாரம்பரிய முறையில் பாலைக் காய்ச்சி, தயிராக்கி, அதிலிருந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சுகிறோம்.

சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிற நெய், தயிரில் இருந்து எடுக்கிற நெய் தான். வட மாநிலங்களில் இன்றும்...தயிர் வாயிலாக கிடைக்கிற நெய்யை தான் விரும்பி பயன்படுத்துகின்றனர்.வணிக ரீதியாக, பாலில் இருந்து க்ரீம் எடுத்து நெய் தயாரிப்பது சுலபம் தான் என்றாலும், எனக்கு பாரம்பரிய முறைப்படி நெய் தயாரிப்பதே சரி என்று தோன்றியது. 30 லிட்டர் பாலை காய்ச்சி, உறை விட்டு கடைஞ்சா, 1.50 கிலோ வெண்ணெய் கிடைக்கும். இந்த வெண்ணெயைக் காய்ச்சினால்1 லிட்டர் நெய் கிடைக்கும். இந்த நெய்யில் தான் சுவையும், வாசனையும் அதிகமாக இருக்கும். வெளிமாவட்டங்களில் இருந்தும், நிறைய ஆர்டர்கள் வருகின்றன. இப்போது வரை திண்டிவனத்தில் ஒரு பண்ணையில் இருந்து பாலை வாங்கி அதிலிருந்து நெய் எடுக்கும் பணியை செய்து வருகிறேன். 

ஓராண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட முயற்சியாக சொந்தமாக பண்ணை அமைத்து பால் தயிர் வெண்ணெய் என்று பல பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான திட்டம் . இருதயா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் உடனடியாக வெற்றி பெறுமா என்றால் அதற்கு உழைப்பும் நம்பிக்கையும் தேவை என்பதை புரிந்துக்கொண்டேன். சென்னை, திருச்சி என்று இரண்டு இடங்களில் இருந்தும்  விற்பனை செய்கிறோம் இதில் நேரடியாக விற்பனை செய்வதை விட ஆன்லைனில் தான் அதிக நபர்கள் வாங்கி செல்கின்றனர். எதிலும் உடனடியாக வெற்றி, பெயர் புகழ் கிடைத்து விடாது. தொடர்ந்து அதற்காக நாம் உழைப்பதே நம் வெற்றியை நிர்ணயிக்கும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision