4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி!

4வது  ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி!

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் கர்னல் கார்த்திகேஷ். இவருக்கு நான்காவது முறையாக ராணுவ விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளியிலும், அதன்பிறகு அரசு கல்லூரியில் பயின்றவர். 

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் கார்த்திகேஷ் ராணுவ தினத்தன்று ராணுவ விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மூன்று ராணுவ விருதுகளை வாங்கியுள்ளார். தற்போது 4வது ராணுவ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

கடந்த 2009ஆம் ஆண்டில் மணிப்பூரில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் சிறப்பாக பணியாற்றியதற்காக துணிச்சல் மிகு விருது பெற்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து கருப்பு பூனை படை பிரிவிலும் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் இந்திய ராணுவத்தால் தேர்வு செய்யப்பட்டு சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளிலும் பணியாற்றியிருக்கிறார்.

Advertisement

 இவருக்கு திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் சிரிஸ்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.