தேர்தல் திருவிழாவிற்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில் களைகட்டும் பூ மாலைகள் விற்பனை!!

தேர்தல் திருவிழாவிற்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில் களைகட்டும் பூ மாலைகள் விற்பனை!!

Advertisement

தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக அதிமுக அதனைத் தொடர்ந்து பல புதிய அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் என்றாலே பட்டாசுகள், பிரியாணிகள், பதாகைகள், மேளதாளங்கள் என இந்த கொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியது. அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூ மாலைகள் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது.

Advertisement

தேர்தல் ஆரம்பித்து விட்டாலே போதும் எம்எல்ஏ சீட்டை பிடிப்பதற்கு தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் அரசியல் களத்தில் செய்ய தயாராக இருக்கின்றனர் போட்டியிடும் வேட்பாளர்கள். இப்படி போட்டியிடும் வேட்பாளர்களை உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக தொண்டர்கள் முதலாவதாக பயன்படுத்துவது தான் இந்த பூ மாலைகள்! வரவேற்பு கொடுப்பதற்காக ஆள் உயரத்திற்கு பூ மாலைகளை தங்கள் வேட்பாளர்களக்கு அணுவித்து மகிழ்வார்கள். அந்தவகையில் கடந்த இரண்டு மாதங்களாக பூ வரத்து சற்று குறைவாக வந்தாலும், தற்போது இது பண்டிகை காலம் என்பதால் கூடவே தேர்தல் திருவிழாவும் சேர்ந்து வருவதால் பூ வியாபாரிகள் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் பூமாலைகள் வியாபாரி சங்க தலைவர் கூறுகையில்... "தேர்தலை முன்னிட்டு பூமாலைகள் வியாபாரம் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் எங்களுடைய கடைகளில் 20க்கும் மேற்பட்ட கட்சிக்கொடி பூமாலைகள் விற்பனையாகி வருகிறது. 100 ரூபாய் முதல் 5000 மற்றும் 10,000 என அடுக்கடுக்காக மாலைகள் வைத்துள்ளோம். ஆர்டர் கொடுப்பதுதன் பேரில் அதனை தயார் செய்து வேட்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கி வருகிறோம். திருச்சி மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, மணப்பாறை, மணிகண்டம், ஸ்ரீரங்கம் என அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் கட்சிக்கொடி பூமாலைகள் அனுப்பி வைக்கிறோம்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் திருவரம்பூர் வேட்பாளர் அன்பில் மகேஷுக்கு தற்போது கூட திமுக வண்ணத்தில் பூ மாலைகளை தயார் செய்துள்ளோம். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தற்போது வியாபாரம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்

தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களை அழகு ஏற்றுவது தான் இந்த பூ மாலைகள். தேர்தல் களத்தில் பூ மாலைகள் அலங்காரத்தை கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் பூ வியாபாரிகள், விற்பனையாளர்கள் வாழ்க்கையில் மணம் வீசக் கூடிய ஒன்றாக தான் உள்ளது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd