கொரோனோ நோயை சுயநலத்திற்காக பயன்படுத்தும் சர்ஜிகல் மாஸ்க் வியாபாரிகள்!

கொரோனோ நோயை சுயநலத்திற்காக பயன்படுத்தும் சர்ஜிகல் மாஸ்க் வியாபாரிகள்!

உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.கொரோனா எனும் உயிர்கொல்லி உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ்.

இந்த நிலையில் கொரோனோ வைரஸ் நோயை தடுப்பதற்கு பாதுகாப்பாக இருக்கும் மாஸ்க் என்னும் முகத்திரையை வழக்கத்தைவிட அதிக ரூபாய்க்கு வியாபாரிகள் விற்று வருகின்றனர்.திருச்சியில் சர்ஜிகல் மாஸ்க் சாதாரண காலங்களில் 1 மற்றும் 2 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 15 ரூபாய் கொடுத்தால்தான் கிடைக்கிறது. சில சமயங்களில் அதுவும் இல்லை.காரணம் கேட்டால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இங்கு உள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு உண்டாகின்றன.

Advertisement

சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கு சர்ஜிகல் மாஸ்க் கிடைக்காததாலும் பற்றாக்குறையாக உள்ளதாலும் திருச்சியில் சில கடைகளில் கேட்டு வாங்கி உள்ளனர். இதனை அறிந்து கொண்ட வியாபாரிகள் ஒரு மாஸ்கையே 15 ரூபாய்க்கு வெளிநாட்டு பயணிகளிடம் விற்று வருகின்றனர்.

வியாபாரிகளின் லாபத்திற்காகவும்  தங்களுடைய சுயநலத்திற்காகவும் மற்ற நாட்களை விட 15 ரூபாய் கூடுதலாக மாஸ்க் வாங்கும் நிலைக்கு நோயாளிகளும் மருத்துவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்க நோயாளிகளும் மருத்துவர்களும் மற்றும் பொதுமக்களும் மாநகராட்சி சார்பிலும் காவல் துறை சார்பிலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்!