வாடகைக்கு காரை வாங்கி மோசடி செய்த நபர் கைது- 9 கார்கள் மீட்பு

வாடகைக்கு காரை வாங்கி  மோசடி செய்த நபர் கைது- 9 கார்கள் மீட்பு

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லையில் நந்தகுமார் வயது 27 என்பவர் கார் வாடகை தொழில் செய்து வருவதாகவும், அவரிடம் கடந்த 17.12.2021-ஆம் தேதி தனக்கு தெரிந்த நபர் மூலமாக எதிரி சக்திவேல் என்பவரிடம் தனது Toyoto Etios என்ற காரை மாதவாடகை ரூ.45,000- தருவதாக ஒப்பந்தம் செய்தும், அதற்கு ரூ.10,000/ முன்பணமாக பெற்று காரை ஒப்படைத்தாகவும்,

ஒருமாதம் கழித்து வாடகை தாராமலும், காரையுைம் திருப்பி தராமல் இருந்து வந்ததாகவும் மேற்படி எதிரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டும், வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும் தனது காரை மீட்டு தரக்கோாரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ஆனந்திமேட்டை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் இரண்டு கார்களையும், திருவெறும்பூரை சோந்த நந்தகுமார், வாளவந்தான் கோட்டையை சேர்ந்த ஜெயபாலன், கீழ அடையவளஞ்சான் தெருவை சேர்ந்த சசிகலா, முசிறியை சேர்ந்த செல்வராஜ். மண்ணச்சநல்லூரை சோந்த பாலசந்திரன், கரூர் கோட்டையார் தோட்டத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோரிடமிருந்து தலா ஒரு காரையும் இதேபோன்று ஏமாற்றியிருப்பதாக தெரியவந்ததை தொடாந்து எதிரி சக்திவேல் என்பவரை கடந்த 10.03:22-ந் தேதி கைது செய்தும், அவரிடமிருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 09 கார்களையும் கைப்பற்றி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், மேற்படி வழக்கில் கைப்பற்றப்பட்ட 09 கார்களை வாகனத்தின் உரிமையாளர்களிடம் இன்று (30.03.22)-ந் தேதி ஒப்படைக்கபட்டது. மேலும் இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து கார்களை மீட்டு கொடுத்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாரட்டினார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO