வீட்டில் அமர்ந்து ரூபாய் 18 ஆயிரம் சம்பாதிக்கலாம், தெரியுமா?

வீட்டில் அமர்ந்து ரூபாய் 18 ஆயிரம் சம்பாதிக்கலாம், தெரியுமா?

பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோன்ற திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கினார். அதில் ஒன்றுதான் மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யதயா யோஜனா இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளில் மேற்கூரை சோலார் பேனல்களை மத்திய அரசு நிறுவும்.

மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வீட்டில் இருந்தபடியே ரூபாய்18 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.பட்ஜெட் உரையின் போது இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பான தகவல்களை தெரிவித்துள்ளார். சூரிய சக்தி அமைப்பின் கீழ், ஒரு கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெற முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

அதிக மின்சாரம் உற்பத்தி செய்பவர்கள் அதை மின் விநியோக நிறுவனங்களுக்கும் விற்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வீட்டில் அமர்ந்து மக்கள் ரூபாய் 18 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் அப்புறம் என்ன இன்னைக்கே சோலார் பேனல்களை போட்டுவிட வேண்டியதுதானே.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision