ஒருபுறம் அரவணைப்பு - மறுபுறம் ஐடி ரெய்டு.... பாஜகவில் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா !!

ஒருபுறம் அரவணைப்பு - மறுபுறம் ஐடி ரெய்டு.... பாஜகவில் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா !!

சூர்யா சிவாவுக்கு பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த சூர்யா சிவாவுக்கும், தமிழக பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விவாதப் பொருளாக்கியது.

சூர்யாவை மேலிடம் சஸ்பெண்ட் செய்திருந்தது. திருச்சி சூர்யா சிவா கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பிசியாகவே இருந்தார். குறிப்பாக அண்ணாமலைக்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறி வந்தார். திருச்சி சூர்யா சிவாவுக்கு அளிக்கப்பட்ட 6 மாதம் தண்டனைக் காலம் முடிந்த நிலையில், அவரை மீண்டும் கட்சிக்கு அழைப்பது குறித்து பாஜக தலைமை எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.

நேற்று (02.11.2023) பாஜக தலைவர் அண்ணாமல ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு நடந்துகொண்டதால், மீண்டும் பாஜகவில் ஓபிசி பிரிவு பொதுச் செயலாளராக தொடர்கிறார் எனக்கூறப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு திருச்சி சூர்யா சிவா 6 மாதம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார்.

திமுகவின் டில்லி முகமாக பார்க்கப்படுகிறார் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவாவிற்கு பாஜகவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் அவர் பாஜகவை விட்டு வெளியேறுகிறார் என்ற பேச்சு எழுந்தது. தஞ்சாவூரில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், பழனிசாமி முன்னிலையில், சூர்யா சிவா, அதிமுகவில் இணைகிறார் என்ற ஒரு தகவல் திருச்சியை வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision