லல்லு வைக்கப்போகிறாரா ஆப்பு !!

லல்லு வைக்கப்போகிறாரா ஆப்பு !!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் திரும்ப இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதை நிதிஷ்குமார் மறுத்தார். இந்த ஊகங்களுக்கு மத்தியில், நிதிஷ் குமாரை பாட்னாவில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான அன்னே மார்க்கில் ராஷ்டிரீய ஜனதாதளத்தினர் சந்தித்து பேசியுள்ளனர்.

தற்பொழுது பீகார் அரசியலில் புது பரபரப்பு கிளம்பி இருக்கிறது. லல்லு - நிதிஷ் சந்திப்பு நடக்க இருந்தது இதற்காக லல்லு வீட்டிற்கு சென்றுள்ளார் ஆனால் லல்லு அங்கு இல்லை அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்த நிலையில்தான் நிதிஷ்குமாரை மீண்டும் சென்று பார்த்துள்ளார். முதல்வர் ரப்ரி தேவியின் அதிகார இல்லத்தில் சமீப நாட்களில் நிதிஷ் இல்லத்துக்கு நிதிஷ்குமார் லல்லு இடையே நடந்த 3வது சந்திப்பு நடந்துள்ளது. ஆனால், முக்கியமான சந்திப்பு இது என்பதால், இதற்கு பின்னால் வலுவான காரணம் இருக்கும் என்று ஊடகங்கள் சுற்றி சுற்றி வருகின்றன.

இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை. "மெகா கூட்டணியில் ஏதோ தீவிரமான விஷயம் நடக்கிறது. அதனால்தான் உயர் மட்ட தலைவர்கள் குறுகிய இடைவெளியில் கூட்டங்களை நடத்துகின்றனர்" என்று பெயர் கூற விரும்பாத ஆர்ஜேடியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். ஆனால், ராஜ்யசபாவில் ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா பேசிய 'தாகூர் சாதி' பற்றிய கருத்து மாநில அரசியலில் அதிக சூட்டை கிளப்பி உள்ளதாக அந்த மூத்த தலைவர் தெரிவித்தார்.

ஆக ஆக INDIA கூட்டணியிலும் சிக்கல் உருவாக ஆரம்பித்துள்ளது, வடக்கே உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம பேச்சு இன்னும் சங்கடத்தை குறைக்கவில்லை என்பது மட்டும் கண்கூடு என்கிறார்கள் விபரம் அறிந்த டெல்லி வாலாக்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision