நகை கடையில் பணிபுரியும் பணியாளர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா. 3 நாட்கள் கடையை மூடி வைக்க மாநகராட்சி உத்தரவு

நகை கடையில் பணிபுரியும் பணியாளர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா. 3 நாட்கள் கடையை மூடி வைக்க மாநகராட்சி உத்தரவு

திருச்சி மாநகராட்சி, கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்ட வார்டு 57ல் கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பிரபல நகை கடையில் பணிபுரியும் பணியாளர் ஒருவரின் உறவினருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நகர்நல அலுவலரின் மேற்பார்வையில், மேலும் தொற்று பரவாமல் இருக்க கடையின் உரிமையாளர் உட்பட 42 பணியாளர்களுக்கு  கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் கடையை மூடி வைக்கவும்  உத்தரவிடப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கடைகள் வணிக வளாகங்கள் அனைத்தும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும், இதை மீறுவோருக்கு அபராதமும் மற்றும் தக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU