திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் இல்லை - ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் இல்லை -  ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு முக்கொம்பு கொள்ளிடத்தில் 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்... "தற்பொழுது திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததற்க்கு காரணம் வடிகால் உள்ள பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளது தான். தற்போது வரக் கூடிய மழை நீரானது புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள மழைநீர் . தற்போது சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நாளை இரண்டாயிரத்து 500 கனஅடியாக குறையும். படிப்படியாக 24 மணி நேரத்தில் மழை நீரின் அளவு குறையும் வீடுகளுக்குள் உள்ள மழைநீரும் வடியும்" என குறிப்பிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 154 குளங்கள் அரியாறு நீர்வள ஆதாரத்துறையில் உள்ளது. இதில் 75 சதவீதத்திற்கும் மேல் என 87 குளங்கள் நிரம்பி உள்ளன .100 குளங்கள் இன்னும் இதில் நிரம்ப வாய்ப்புள்ளது. பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள 1251 குளங்களில் 60 சதவீதம் நிரம்பி விட்டது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn