தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமையில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 16.02.2025 நடைபெற்றது. முதலில் மாவட்டத் துணைத் தலைவர் முனைவர்.மு.சலாஹூதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். காலை அமர்வில் கருத்தரங்கம் மற்றும் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

சுயசார்புக்கான அறிவியலும், தொழில்நுட்பமும் மற்றும் காலநிலையை தாங்கக்கூடிய ஜனநாயகபூர்வமான வளர்ச்சி என்ற தலைப்பில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் கருத்துரை வழங்கினார். 2023-24 கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையால் சிறந்த பள்ளிகளுக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியர்களான கா.ச.ஜீவானந்தன் (தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி), இரா.மார்செலின் ரெஜினா மேரி (வையம்பட்டி ஒன்றியம் பாம்பாட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி), ச.அரங்கசாமி (புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) ஆகியோர்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மு.மாணிக்கத்தாய், மாநில செயற்குழு உறுப்பினர் க.உஷாநந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மதிய அமர்வில் பொதுக்குழு நடைபெற்றது. கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.திருச்சிராப்பள்ளி பறவைகள் பூங்கா ஊர் 200/- நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். தேவையான அளவு வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தித் தரவேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யவேண்டும்.

2.மகாத்மா காந்தி அரசு மருத்துவ மனையில் அதிநவீன சிகிச்சைகள் உள்ளது பாராட்டுக்குரியது. இருந்தாலும் அதிநவீன ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் கிடைக்க தாமதமாவது மேல்சிகிச்சை தொடர்வதிலும், நோயாளிகள் குணமடைவதிலும் தாமதமாகிறது. எனவே கூடிய விரைவில் முடிவுகள் கிடைக்க தக்க நடவடிக்கைகளை நிர்வாகம் செய்ய வேண்டும்.

3.இரத்த சோகை தடுப்பு நடவடிக்கை, கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றிற்காக ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மாவட்ட பொருளாளராக ச.மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவராக ரா.சந்திரா, இணைச் செயலாளர்களாக வே.சுகுணா, ஆ.யோகலட்சுமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிறைவாக மாவட்ட பொருளாளர் ச.மாரிமுத்து நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision