காய்ச்சலால் நிரம்பி வழியும் திருச்சி மருத்துவமனைகள்
தமிழகத்தில் தற்போது காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு அதிகமாக காய்ச்சல் வருகிறது. பெரியோர்களுக்கும் காய்ச்சல் வருவதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
திருச்சியை பொறுத்த அளவு அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையில் தற்போது 21 குழந்தைகளும் 22 பெரியவர்களும், மகப்பேறு பிரிவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைவிட திருச்சியில் உள்ள தனியார் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பதிவு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வசதி கொண்ட படுக்கை வசதி கொண்ட அறைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் 14 ஒன்றியங்களில் காய்ச்சல் முகாமை அறிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சியும் தற்போது காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறது. பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புடன் விழிப்புணர்வாக இருந்து தங்களை காய்ச்சல் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO