உள்ளாட்சித் தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது பொதுமக்களுக்கு ஓர் விழிப்புணர்வு

உள்ளாட்சித் தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது பொதுமக்களுக்கு ஓர் விழிப்புணர்வு

உள்ளாட்சித் தேர்தலை பற்றி பொதுமக்களுக்கு ஓர் விழிப்புணர்வ உள்ளாட்சித் தேர்தல் ஆனது வார்டுகளுக்கு உள்ள குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை தார்ச்சாலை மற்றும் வார்டுகளுக்குல் ஏற்படும் செய்து தருவதற்காக வார்டுகளுக்கு பொதுவான ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பது ஆகும். அந்த ஒரு நபர் யார் என்பதை தீர்மானிப்பதில் விழிப்புணர்வு தேவை நம்முடைய கடமையும் ஆகும்.

எப்படி தேர்வு செய்வது?

1) அரசியல் கட்சியின் பெயரினை மட்டும் வைத்து ஒருவரை தேர்வு செய்யக்கூடாது
 

2) நாம் எளிதாக நமது வார்டில் உள்ள பிரச்சினையை சொல்லக்கூடிய அளவிற்கும்,அதை அவர் காது கொடுத்து கேட்க கூடியவராக இருக்கவேண்டும்
 

3) தேர்ந்தெடுக்கப்படும் நபர் அடிக்கடி நாம் சரளமாக நம் கண்ணில் படுபவராக இருக்க வேண்டும்.

4) நமக்கு எப்பொழுதும் அவர் மேல் ஒரு மரியாதை உண்டு என்ற நபராக இருக்க வேண்டும். அவரைப் பார்த்தால் பயத்தில் மரியாதை கொடுக்கும் நபராக இருக்க கூடாது.
 

5) தேர்ந்தெடுக்கப்படும் நபர் நமக்கு நேரடியாகவோ அல்லது சொந்தம் நட்பு வட்டாரங்களில் நெருங்கிய பழக்கம் உடையவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் எளிமையாக நமது பிரச்சனையை சொல்ல இயலும்.
 

6) அராஜகம், மிரட்டல், அச்சுறுத்தல் கேலி, கிண்டல் போன்ற எந்தவித குற்றச்சாற்று இல்லாத எளிமையான நபராக இருக்க வேண்டும்.

7) மொத்தத்தில் வார்டில் உள்ள பிரச்சினையை சரிசெய்ய தோள்கொடுக்கும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும்.

ஆகையால் உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்றத் தேர்தல் போல் அல்ல எந்தவித அரசியல் கட்சியின் பெயரை மட்டும் வைத்து வாக்களிக்காதீர்கள் அந்த நபரின் உண்மை தன்மையை அறிந்து வாக்களியுங்கள் என வழக்கறிஞர் ஹரிபாஸ்கர் கேட்டு கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn