தன்னார்வலர்களை நேசிக்க அழைக்கிறோம்

தன்னார்வலர்களை நேசிக்க அழைக்கிறோம்

திருச்சியில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து வாசிப்பை நேசிப்போம் எனும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தனி நூலகங்களை அமைத்தல், அதற்கான கொடையாளர்களைக் கண்டறிதல், பொதுநூலகத்துறையுடன் இணைந்து வழங்குமுனை நூலகங்களை அமைத்தல். குடியிருப்போர் நலச்சங்கங்களின் உதவியுடன் அடுக்ககங்களில் நூலகங்களை உருவாக்குதல். வாசித்த நூல்களை நன்கொடையாகப் பெற்று, புத்தக வங்கிகளைக் கட்டமைத்தல், புத்தக வங்கிகளின் உதவியுடன் நடமாடும் நூலகங்களை உருவாக்குதல்.

பள்ளிகள், பூங்காக்கள், அடுக்ககங்களின் பொதுவெளிகளில் சிறார்களுக்குக் கதை சொல்லுதல். சிறார்களை வாசிக்கச் செய்தல். அருகிலுள்ள நூலகங்களில் அவர்களை உறுப்பினர்களாக்குதல். செய்தல். புத்தகங்கள், வாசிப்பின் அவசியம் பற்றி இளம்தலைமுறையினரிடம் பேசுதல், அவர்களது ஆர்வத்தைத் தூண்டுதல். பிரபலங்களைக் கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், அவர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றியும் பேசவைத்தல்.

புத்தகங்கள் தொடர்பான எளிய வினாடி வினா போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்குதல். அதிக புத்தகங்களை வாசித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்குதல். தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றியும் அவற்றின் உள்ளடக்கம் பற்றியும் மாணவர்களைக் கலந்துரையாடச்செய்தல். ஊடகங்கள் மூலம் இத்தகைய செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச்சென்று இதனை ஓர் இயக்கமாக வலுப்பெறச் செய்தல் என்பன போன்றவை வாசிப்பை நேசிப்போம் இயகத்தின் செயல்திட்டக்கூறுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லோரிடமும் புத்தக வாசிப்பை கொண்டு சேர்ப்பதற்கு  தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision