திருச்சியில் தக்காளி கிலோ ரூபாய் 90, சின்ன வெங்காயம் 100

திருச்சியில் தக்காளி கிலோ ரூபாய் 90, சின்ன வெங்காயம் 100

திருச்சி காந்தி சந்தையில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கு மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து 65 டன் மட்டுமே தக்காளி வந்துள்ளது. திருச்சி காந்தி சந்தையில் நாள் ஒன்றுக்கு 180 டன் தக்காளி வரவேண்டும்.

மேலும் பசுமை பண்ணை கடைகளில் இவர்களிடம் இருந்து 80 ரூபாய்க்கு தக்காளி வாங்கி 60 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு அரசு விற்பனை செய்கிறது. ஒரு மாத காலம் இந்த விலை ஏற்றம் என்பது இருக்கும் என தக்காளி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று திருச்சி பழைய பால்பண்ணை வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது. மைசூரில் இருந்து 50 டன் மட்டுமே சின்ன வெங்காயம் வந்துள்ளது.

தேவை என்பது 300 டன்னாக உள்ளது. தொடர்ந்து 20 நாட்களுக்கு 100 ரூபாய்க்கு மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் விற்கப்படும் கட்டாயம் என வெங்காய தரகுமண்டி செயலாளர் தங்கராஜ் தகவல்.

தமிழகத்தில் தாராபுரம், உடுமலைப்பேட்டை, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு சின்ன வெங்காயம் வரும் அதுவரை இந்த விலை நீடிக்கும் என குறிப்பிட்டார். பெரிய வெங்காயம் கிலோ 22 ரூபாய்க்கு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. நாசிக்கில் இருந்து 500 டன் வெங்காயம் வந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn