சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி- மாவட்ட ஆட்சியர் தகவல்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் (28.03.2024) முதல் (30.03.2024) தேதி வரை காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு அரங்கம், திருச்சியில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தொழில் முனைவோர் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொக்கை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் (ஆண் / பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆவது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.5,000/-ஆகும். இப்பயிற்சியில் சேரவிரும்புவோர். இப்பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032. 044-22252081, 22252082, 8668102600, 8668100181, 7010143022 .பங்கு பெற முன்பதிவு அவசியமாகும். புயிற்சியில் கலந்து கொள்வபவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision