வரி உயர்த்தி வசூலித்தால் தான் மத்திய அரசு நிதி.- தமிழ்நாடு முதல்வர் எதிர்த்து போராட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வேண்டுகோள்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் அக்கோரிக்கை மனுவில் தங்கள் அரசின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கள் துறையில் உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அனைவரும் குடிநீர், சாலை தெருவிளக்கு புதைவடிகள் பதித்தல் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் கிடைக்கப் பெற்று நல்ல நிலையில் அனைத்து தேவைகளும் கிடைக்க பெற்று தங்கள் திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்கள் நல்ல நிலையில் இருப்பதாக தங்கள் அரசு கூறி வருகின்றீர்கள் சந்தோசம்.
இந்நிலையில் அனைத்து உள்ளாட்சிகளிலும்மா நகராட்சி நகராட்சிகளில் சொத்து வரி என்பது 6% உயர்த்தி உள்ளதாகவும் வரி கட்ட தவறினால் காலதாமதத்திற்கு 1% வட்டி வசூலிப்பதாகும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டால் மத்திய அரசு வரி உயர்த்தினால் தான் மத்திய அரசினால் கொடுக்கப்படும் நிதி கொடுக்கப்படும் என கூறி அதனால் வரி உயர்த்தி உள்ளதாக கூறுகின்றனர்.
ஒரே நேரத்தில் சொத்து வரி ஒரேடியாக உயர்த்துவது என்பது பொதுமக்களுக்கு அதுவும் அடித்தட்டு நடுத்தர மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர். காரணம் சாதாரண மக்கள் வீடு கட்டுவது என்பது ஒரு கனவு அதுவும் வட்டிக்கு வாங்கி வீட்டைக் கட்டி குடி வந்தால் உடனே வரி உயர்வு வரும் என்பது சாமானியராகிய எங்களைப் போன்ற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் கடினமாகும் எனவே வரி உயர்வு என்பது பேரதிர்ச்சியாகும். எனவே தமிழக மக்களுக்கு அப்பாவாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் முதல்வர் அவர்கள் எப்படி மத்திய அரசு கொண்டு வந்த மும்மொழி கொள்கையை எதிர்க்கின்றீர்களோ அதே போல் நீட் தேர்வை எதிர்ப்பதைப் போல் வரி உயர்வையும் எதிர்த்து பொது மக்களுக்கு நல்ல தீர்ப்பை பெற்று தர வேண்டும்.
அதுவரை ஏற்றிய வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். கோரிக்கை வைக்கின்றேன் என்று கூறியுள்ளார்
திருச்சி விஷன்செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision