திருவெறும்பூர் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் இருவர் கைது

திருவெறும்பூர் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் இருவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் கோபி (எ) கோவிந்தராஜ் இவர் கடந்த 7ந் தேதி இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டிபன் கடையில் டிபன் வாங்க நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மரும கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது.

இச்சம்பவம் தொடர்பாக திருச்சி எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், பெல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கமலவேணி, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கபட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கோபியைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருச்சி அரியமங்கலம் உக்கடை மலையடிவாரத்தைச் சேர்ந்த கருப்பு (எ) அமீர் (26) என்பவனை தனிப்படை போலீசார் நேற்று  கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், கோபி மற்றும் அவரது நண்பர்கள் அந்த பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மது அருந்த வரும் காசு பணம் வைத்து உள்ளவர்களிடம் நட்பாக பேசி தனியே அழைத்து சென்று மது அருந்துவதும் அவர்கள் போதையானதும் அவர்களிடம் இருந்து காசு பணம் செல் போன் நகைகளை பறித்துக் கொண்டு அடித்து விரட்டி விடுவதும் வழக்கமாக கொண்டிரருந்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதுபோல் கோபி மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இருந்த பொழுது பழக்கமான திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கருப்பு (எ) அமீர் ஒருவன். இந்நிலையில்  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  கோபி நண்பர்களுடன் அமர்ந்து துவாக்குடி அண்ணாவளைவு பகுதியில் மது அருந்தியதாகவும் அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு அடிதடியில் முடிந்ததாகவும் இதில் கோபி கருப்பு வை அடித்து மண்டையை உடைத்ததோடு கருப்பு வைத்திருந்த பணத்தையும் செல்போனையும் பறித்துக் கொண்டு விரட்டி விட்டதாகம் அப்பொழுது கருப்பு கோபியை பார்த்து உன்னை நான் என்று இருந்தாலும் கொன்று விடுவேன் என கூறி சென்றதாகவும்

அதன் அடிப்படையில் கடந்த 7ம் தேதி கருப்பு தனது நண்பர்களான துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த வேலூ (எ) ராஜதுரை மற்றும் ஒருவருடன் சேர்ந்து கோபியை அண்ணா வளைவில் வைத்து வெட்டி கொண்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளன் என போலீசார் கூறுகின்றனர்.

மேலும் கோபி கொலை வழக்கில் கோபியை கொலை செய்வதற்கு உரிய திட்டத்தை வகுத்துக் கொடுத்ததாக துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் தெருவை சேர்ந்த ஜான் மகன் ரவி போஸ்கோ (26) என்பவனையும் தனி படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கோபியை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn