மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை
1965 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழகத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. இவர்களது நினைவிடங்களில் திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், மாவட்ட செயலாளர் முசிறி கலைச்செல்வன், சக்தி ஆற்றல் அரசு, புல்லட் லாரன்ஸ், கலைச்செல்வன், திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன்,
திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, இளம் சிறுத்தைகள் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அரசு, பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் பெல் சந்திரசேகரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் காட்டூர் புரோஸ்கான், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக *மாணவரணி* சார்பில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. *திருச்சி நீதிமன்றம் MGR சிலை அருகில் இருந்து..* ஊர்வலமாக சென்று திருச்சியில் உள்ள தமிழ் மொழிப்போர் தியாகி கீழப்பழூர் சின்னசாமியின் நினைவிடத்திலும், விராலிமலை சண்முகம் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழ் மொழியை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, வளர்மதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ப.குமார், ரத்தினவேல், சட்டமன்ற முன்னாள் அரசு கொறடா மனோகரன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
திருச்சி நீதிமன்றம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று திருச்சியில் உள்ள தமிழ் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவிடத்திலும், விராலிமலை சண்முகம் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் 50க்கு மேற்பட்டோர் மரியாதை செலுத்தினார்கள். பின்னர், தமிழ் மொழியை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருச்சி நீதிமன்றம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று திருச்சியில் உள்ள தமிழ் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவிடத்திலும், விராலிமலை சண்முகம் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில், ஓ.பி.எஸ் அணியினர் 100க்கு மேற்பட்டோர் மரியாதை செலுத்தினார்கள். பின்னர், தாய் மொழியாம் தமிழ் மொழியை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருச்சியில் உள்ள தமிழ் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவிடத்திலும், விராலிமலை சண்முகம் நினைவிடத்திலும் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision