திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இலவச வைபை சேவை

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இலவச வைபை சேவை

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (2024 - 2025) ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் நான்காவது பட்ஜெட் இது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். 

நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில்நுட்பத்துறைதொடர்பான அறிவிப்பில்..... இந்த நிதியாண்டில் பல்வேறு துறை தலைமை அலுவலகங்களுக்கும், சார்பு அலுவலகங்களுக்கும் தேவையான மென்பொருள் மற்றும் கணினிகள் உள்ளிட்டவற்றை வழங்கவும், அலுவலர்களுக்கு உரிய திறன்பயிற்சி அளித்து மின் அலுவலகத் திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவச வைபை சேவை

பேரிடர் தரவு மீட்பு வசதிகளுடன் கூடிய மேகக்கணினியக் கட்டமைப்பு கொண்ட தாக மாநிலத் தரவு மையம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும்.

மதுரையில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவி லும், திருச்சியில் ரூ.345 கோடி மதிப்பீட்டில்6லட்சத்து 30 ஆயிரம் சதுரடி பரப்பளவிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர்,தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 13 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு இயக்கம்

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கப்பூர்வமான வழி காட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை வழிநடத்திடத் தேவைப்படு்ம் வரையறைகளைத் தெளிவாக வகுத்திடவும் முதலமைச்சரின் தலைமையில், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக் கம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

கோவை விளாங்குறிச்சியில் 20 லட்சம் சதுர அடியில் 2 கட்டங்களாக ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப்பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision