பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்வதை கண்டுகளித்த மாணவர்கள்

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்வதை கண்டுகளித்த மாணவர்கள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை எக்ஸ்போசாட்' உள்ளிட்ட செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. கடந்த ஆண்டு முழுவதும் விண்வெளித்துறையில் சாதனைகளை படைத்த இந்தியா, 2024 ஆம் ஆண்டிலும் சாதனையை தொடர உள்ளது. அந்த வகையில், ஆண்டின் முதல் நாளான இன்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. திருச்சி Propeller technology நிறுவனம் 420 பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் குறித்த வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அது மட்டும் இன்றி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான பயிற்சியை அளித்து வருகின்றன.

சிறந்த 45 மாணவர்கள் இஸ்ரோ சென்று ராக்கெட் விண்ணில் ஏவப்டுவதை நேரில் காண்பதற்கான வாய்ப்பை பெற்றனர். அவர்கள் அனைவரும் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்து சென்றதை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision