கழிவுநீர் கலந்த மழைநீரை அப்புறப்படுத்தும் சிறுவர்கள் - நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

கழிவுநீர் கலந்த மழைநீரை அப்புறப்படுத்தும் சிறுவர்கள் - நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் வாழவந்தான் கோட்டை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பெரியார் நகர் ஒரு சென்ட் தெருவில் இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் வீடுகளுக்கு முன் மற்றும் சாலையின் இரு புறமும் மழைநீர் மற்றும் கழிவு நீர்  தேங்கியுள்ளது.

நோய்தொற்று காலகட்டத்தில் இது போன்ற  மழை நீரோடு கழிவுநீரும் கலந்து  சாலையோரங்கிலும், வீட்டின் முன்பும் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எத்தனையோ முறை இதுபோன்று மழை நீர் தேங்குவதை குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெற்றோர்கள் பணிக்கு செல்வதால் சிறுவர்களே கழிவுநீர் கலந்த மழை நீரை அகற்றும் பணியினை செய்கின்றனர்.
 

இதனை ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணத்தால் அப்பகுதி சிறுவர்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களை கொண்டு அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குழத்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்புள்ள சூழலில் அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா  என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm