வீட்டு உரிமையாளர்களை அவதிக்குள்ளாக்கும் SIS ACROPOLE அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம்
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள எஸ் ஐ எஸ் அக்ரோஃபோல் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் வாயிற் கூட்டம் நடத்தினர். இதில் "எஸ் ஐ எஸ் புகழ்பெற்ற நிறுவனம் என்பதால் நம்பி வீடுகளை வாங்கினோம். நாங்கள் வீடுகளை வாங்கி பல வருடங்களுக்கு பிறகு வீட்டு உரிமையாளர்கள் சங்கம் ஒன்றை அமைக்க தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் திடீரென 2023ம் வருடம், மார்ச் மாதம் 17ஆம் தேதி, மேற்படி நிறுவனத்தார் ஒரு இடைக்கால குழுவை பதிவு செய்துள்ளார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கே காவிரி குடிநீர், கழிவு நீர் வெளியேற்றம், சொத்து வரியில் குழப்பம் அபராதம், குடியிருப்போருக்கு பாதுகாப்பின்மை, வளாகத்திற்குள் தெரு நாய்களின் குரங்குகளின் தொல்லை, வாகன நிறுத்த வசதிகளில் குளறுபடிகள்,
போதுமான உயரமற்ற சுற்றுச்சுவர் மற்றும் முகப்பு கதவு இல்லாமல் இருப்பது, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அமைத்தல் போன்ற வேலைகளை செய்து அதை குடியிருப்போர் சங்க நிர்வாகத்திடம் மேற்படி நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இவற்றை முறையாக தீர்த்த பின்னரே நிர்வாகம் இவ்வடுக்கு மாடி குடியிருப்பின் நிர்வாகத்தினை வீட்டு உரிமையாளர்கள் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
தற்பொழுது நிர்வாகம் தன்னிச்சையாக அமைத்த இடைக்கால குழுவை கலைத்துவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பணிக்குழுவை அங்கீகரித்து தேர்தலுக்கான நடைமுறைகளை துவக்க வேண்டும் என்று குடியிருப்போர் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn