திமிங்கல உமிழ் நீர் விற்பனை செய்ய முயன்ற ஐந்து பேர் கைது

திமிங்கல உமிழ் நீர் விற்பனை செய்ய முயன்ற ஐந்து பேர் கைது

சென்னை வனக்காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மதுரை TNWCCB வனக்காவல் நிலைய படையினர் திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கல்லணை கிராமத்தை சேர்ந்த P.கார்த்திக் த/பெ பாண்டி (36) , A.வடிவேலன் த/பெ அழகு (42) , கோவில்பட்டி கிராமம் V. சண்முகப்பிரியன் த/பெ வீராசாமி (38) தென்காசி மாவட்டம் பாலூர் சத்திரம் பகுதியை சேர்ந்த S.குமார் த/பெ சவரிமுத்து(43) மற்றும் கடையநல்லூர் வட்டம் குணராம நல்லூர் கிராமத்தை சேர்ந்த V. ஜெயபால் ஞானசிங் த/பெ விக்டர் ஆகியோரிடம் இருந்து 19.200 கி.கி எடையுள்ள நான்கு கட்டிகள் திமிங்கலம் உமிழ்நீர் (Ambergris) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் மேல் நடவடிக்கைக்காக திருச்சி வனச்சரங்க அலுவலரிடம் ஒப்படைத்தார்கள் 

எதிரிகளிடம் தீவிர புலன் விசாரணை செய்ததில் இந்த கடத்தலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வந்ததாகவும் இது தடை செய்யப்பட்ட வணிகம் என்று தெரிந்தே செய்து வருவதாகவும் தெரிவித்தார்கள். எதிரிகள் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டம் பிரிவு 2(2) வன உயிரின பொருட்கள் என வரையறை செய்யப்பட்ட பிரிவு 2(36) பட்டியல் I வரிசை எண் 169 இல் உள்ள திமிங்கலத்தின் பிரிவு 2(32) பதப்படுத்தப்படாத ட்ரோஃபி என வரையறுக்கப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீரை ( Ambergris) வணிகத்திற்கு தடை செய்யப்பட்டதையும் மீறி விற்பனை செய்ய முயன்றது பிரிவு 39(b) ன் படி வன உயிரின பொருட்கள் பிரிவு 39(d) ன் படி குற்றம் இழைக்க பயன்படுத்திய செல்போன்கள் மாநில அரசின் சொத்தாகும். பிரிவு 50 ன்படி எதிரிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்: II முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.