திருச்சியில் மின்சாரம் பாய்ந்து இறந்த இளைஞரின் சடலத்தை வாங்க மறுப்பு - 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து இறந்த இளைஞரின் சடலத்தை வாங்க மறுப்பு - 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (33). இவர் தா.பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி ( 25) என்ற மனைவியும், பவிஷ்னா (3), என்ற மகளும், கார்த்திக்கிருஷ் (1) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பெரியசாமி வெள்ளிக்கிழமை மாலை அவரது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், அப்போது அவர் செல்லும் வழியில் அறுந்து விழுந்த மின் கம்பி அவர் மீது மோதியதில் மின்சாரம் பாய்ந்து பெரியசாமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜெம்மபுநாதபுரம் போலீஸார் சம்பவயிடம் சென்று பெரியசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை மருத்துவமனைக்கு வந்த பெரியசாமியின் உறவினர்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்ததுடன் தமிழக அரசு பெரியசாமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி தொகை வழங்கி, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி கோட்டாட்சியர் ராஜன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கழக துணை கண்காணிப்பாளர் சுப்பையா (முசிறி டிஎஸ்பி பொறுப்பு), வட்டாட்சியர் பாத்திமாசகாராஜ், காவல் ஆய்வாளர்கள் பொன்ராஜ் (தா.பேட்டை), கதிரேசன் (முசிறி), தா.பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் இறந்த பெரியசாமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் காசோலையாக விரைந்து வழங்குவதாகவும், இறந்தவரின் மனைவிக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கு மேலதிகாரிகளிடம் பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்தனர். இதில் உடன்பாடு இல்லாததால் இறந்தவரின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்

பிரேத பரிசோதனை கூடம் முன்பு அமர்ந்து தொடர்நது இரண்டாவது நாளாக அரசு மருத்துவமனைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் முசிறி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இதனை தொடர்ந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆசிரியர் சடலத்தை வாங்க மறுத்து இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision