திருச்சியில் தொழிற்சாலைகளின் கருத்தரங்கு

திருச்சியில் தொழிற்சாலைகளின் கருத்தரங்கு

ஆக்குபேஷனல் ஹெல்த் அண்ட் சேஃப்டி,ஃபர்ஸ்ட் ரெஸ்பான்டர் ட்ரெயினிங் ப்ரோக்ராமின் முக்கியத்துவம் மற்றும் ட்ரெய்னிங் நீட் அனாலிசிஸ் குறித்த தொழிற்சாலைகளின் கருத்தரங்கு திருச்சி எஸ் ஆர் எம் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் தமிழ்நாடு அப்பெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர் ஃபார் ஹெல்த் கேர் மற்றும் டைரக்டரேட் ஆப் இண்டஸ்ட்ரியல் சேஃப்டி அண்ட் ஹெல்த் இணைந்து சிறப்பாக நடத்தியது. தெற்கு ரயில்வே, பிஎச்இஎல், ஐடிசி, எம்ஆர்எப், புங்கே இந்தியா லிமிடெட், சன்மார், ரானே TRW, ரானே பிரேக் லைனிங், ராம்கோ சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ்,

டால்மியா சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் ஆனந்த் இன்ஜினியரிங் வேல்முருகன் இண்டஸ்ட்ரீஸ், டூல் பேப் போன்ற முன்னணி நிறுவனங்களில் இருந்து 40க்கும் அதிகமான முதன்மை மேலாளர்கள் மனித வள அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் டாக்டர் ஆர் சிவக்குமார் தலைவர் எஸ் ஆர் எம் குழுமம் சென்னை ராமாபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி தலைமையில் சித்தார்த்தன்,

அடிஷனல் டைரக்டர் இன்டஸ்ட்ரியல் சேஃப்டி அண்ட் ஹெல்த், டாக்டர் சுகன் சின்ன மாறன், ஹெட் ஆஃப் ஆபரேஷன்ஸ் தமிழ்நாடு அப்பெக்ஸ் நிறுவனம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இவ்விழாவில் 600-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு அவசர முதலுதவி சிகிச்சையின் அவசியத்தை அறிந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision