திருச்சி செய்தியாளர்களை தாக்கிய பார் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

திருச்சி செய்தியாளர்களை தாக்கிய பார் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பணியாற்றி வரும் இரு தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் (தீனா -நியூஸ் தமிழ், வினோத் - தந்தி) கடந்த 17ம் தேதி வாத்தலை பகுதியில் பிரத்யேக செய்தி சேகரிக்க சென்றனர்.

அதில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே வாத்தலை முட்செடிகள் உள்ள பகுதியில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இரு செய்தியாளர்களும் அங்கே இருந்து புறப்பட்டு திருப்பைஞ்சீலி பகுதியில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகிய மணவாளம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

இவர்களை வழிமறித்த ஐந்துக்கும் மேற்பட்டோர் செய்தியாளர்கள் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். செல்போன்களை உடைத்தும், மற்றொரு செய்தியாளரின் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். வீடியோ கேமராவை பறிக்க முயற்சி செய்த பொழுது அதனை அவர்களிடமிருந்து காப்பாற்ற மற்றொரு செய்தியாளர் பெரும் போராட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இரு செய்தியாளர்களும் தற்பொழுது திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பார் உரிமையாளர் சிங்காரம், பாலகிருஷ்ணன், பிரவீன் ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision