திருச்சியில் தேசியக்கொடியுடன் ரெயில் மறியில் ஈடுபட்ட 35 இளைஞர்கள் கைது
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் குறுகியகால அடிப்படையில் 10 ஆண்டுகளும் மற்றும் நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும்வயது வரையிலும் வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு பணியமர்த்தப்படுவதே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் 'அக்னிபாத்' திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்தது.
6 மாத பயிற்சிக்குப் பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், பணிக்காலம் முடிந்து தேர்வு செய்யப்படும் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் என்ற மத்திய அரசின் இந்த புதிய திட்டத்திற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு வலுத்து வருவதுடன் ரெயில் எரிப்பு மற்றும் சாலைமறியல் போராட்டங்களில் இளைஞர்கள் ஈடுபட்ட வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக திருச்சி ஜங்சன் ரெயில்நிலையத்தில் இன்று திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக 10 மணிக்கு மாற்றாக 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது ரெயில்நிலையத்தில் வந்திருந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரெயில்வே பணிக்குத் தேர்வாகிய இளைஞர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 35 பேர் 4வது நடைமேடை ரெயில்வே தண்டவாளத்தில் தேசியக் கொடியுடன் அமர்ந்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்களை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்திய பின்னர் வழக்கு பதிந்து கைது செய்தனர். இப்போராட்டத்தினால் ரெயில் 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO