திருச்சி SRM வளாகத்தில் திட்ட வரைவு கண்காட்சி
திருச்சி SRM வளாகத்தில் ஜூன் 16 & 17 திட்ட வரைவு கண்காட்சி மிக விமர்சையாக கொண்டப்பட்டது. இவ்விழாவில் 3000க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். இந்த திட்ட வரைவு கண்காட்சியில் SRM வளாகத்தில் பயிலும் மாணவை்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் 188 திட்ட வரைவுகள் செய்யப்பட்டு அரசு பள்ளி மாணவ மாணவியர் திறம்பட எடுத்துரைத்தனர்.
மேலும் இவ்விழாவானது திருச்சி SRM குழு நிர்வாகிகள் முன்னிலையில் மற்றும் சிறப்பு விருந்தினர் காரைக்குடி CSIR- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் N. கலைச்செல்வி, தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. விழாவின் பொது மக்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முனைவர் B. கணேஷ் பாபு, முதல்வர், SRM TRP பொறியியல் கல்லூரி, ஐயா வறபுரையாற்றினர். விழாவின், SRM குழுமம், திருச்சி மற்றும் இராமபுரம் வளாக தலைமை மருத்துவர் S.சிவகுமார், தலைமையுரை ஆற்றினர். அதனை தொடர்ந்து வளாக தலைமை இயக்குனர் முனைவர் N.சேதுராமன் வாழ்த்துரை ஆற்றினார். மேலும் விழாவின் சிறப்பு விருந்தினர் முனைவர் N. கலைசெல்வி, இயக்குனர் CSIR சிறப்புரை ஆற்றினர்.
அவர்களது சிறப்புரையில் இந்நவீனமான உலகில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றியும், கரியமிலவாயு குறித்த விழிப்புணவு எடுத்துரைத்தார். மாணவர்கள் பல்வேறு துறையில் திட்ட வரைவு செய்முறையை கையாள வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். தாமஸ் ஆல்வா எடிசன், டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களின் மேற்கோள்கள் மூலம் தம் உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து முத்துக்குமார், டீன் SRM IST, திருச்சி நன்றி உரை ஆற்றினார். நிறைவாக , விழாவின் சிறப்பு விருந்தினை்கள் மற்றும் SRM குழும தலைவர்கள் கொடியசைத்து திட்ட வரைவு கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO