இன்று எழுந்து வணக்கம் சொல்லும் காவல்துறை நாளை வண்டியில் ஏறு என்பார்கள்- திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேச்சு
திருச்சிராப்பள்ளி மாவட்ட மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிமன்றம் திறப்பு விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல்குமார் பங்கேற்று குத்துவிளக்கேற்றியும் பின்னர் பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை அமர்வு நீதியரசர் பாபு உள்ளிட்ட, நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேசுகையில்.. நடப்பாண்டு திருச்சிக்கு வழக்கறிஞர்கள் சேம்பர் வரும், ஆளுங்கட்சியிலும் இருந்திருக்கிறோம். எதிர்க்கட்சிகளும் இருந்திருக்கிறோம், ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியில் தான் அதிகம் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது எங்களுக்கு ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான், ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு தருகின்ற, பாதுகாக்கின்ற அமைப்பு. இப்படியும் இருந்திருக்கிறோம், அப்படியும் இருந்திருக்கிறோம் இன்றைக்கு காவல்துறை எழுந்திருந்து வணக்கம் சொல்லுவார்கள், நாளை வண்டியில் ஏறு என்று சொல்லுவார்கள். எப்போதும் நீதிக்கு உற்றதுனையாக இருந்தவர்கள் நீதியரசர்கள் தான் என பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் பேசுகையில்
மனுதாரர்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு பணத்தேவைகள் இருக்கும் பட்சத்தில், அதனை பூர்த்தி செய்ய மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விரைந்து முடித்து அவர்களுக்கான தொகையை விரைந்து பெற்று தர நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும், இந்த சிறப்பு நிதி மற்றும் மோட்டார் வாகன வழக்குகளை விரைந்து முடிக்கவும் நிவாரணம் பெற்று தரவும் உதவிகரமாக இருக்கும்.
வழக்கறிஞர்கள் மனுதாரர்களிடம் வழக்குகளுக்கு அதிக தொகை வசூலிக்க கூடாது, பர்சன்டேஜ் கணக்கில் பணம் வசூலிக்க வேண்டாம்.
மேலும் மனுதாரர்களின் சூழலை கருத்தில் கொண்டு நீதியரசர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கிகளுடன் கலந்துபேசி நிவாரணத்தை விரைந்து பெற் று தர வேண்டும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn