ஊரடங்கு விதிமுறைகள் மீறிய பால் மற்றும் இறைச்சி கடைக்கு சீல்

ஊரடங்கு விதிமுறைகள் மீறிய பால் மற்றும் இறைச்சி கடைக்கு சீல்

கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் மருந்தகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கும் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இதனையடுத்து திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் கைலாஷ் நகர் போலீசார் ஹிந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் மஹாலில் இயங்கி வந்த ஸ்ரீ மாதவன் அழகு பால் தயிர் விற்பனை நிலையம் என்ற பெயரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஊரடங்கு விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து வருவாய் துறை ஆய்வாளர் கீதா மற்றும் திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோரால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதே போன்று 
திருவெறும்பூர் வள்ளுவர் நகர் கோனார் தெருவில் முஸ்தபா இறைச்சி கடையில் ஆடு மற்றும் கோழி கறி விற்பனை செய்து கொண்டு இருந்த முகமது முஸ்தபா மற்றும் சாதிக் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து முஸ்தபா இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx