போக்சோ பற்றிய சட்ட நுணுக்கங்கள் குறித்த பயிற்சி
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், இன்று (28.02.2024)-ந் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமங்கலய திருமண மண்டபத்தில், திருச்சி மாநகரத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் பெண் காவல் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை கலந்து கொண்ட "பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012" (POCSO) (Training) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குற்ற வழக்குகள் தொடர்பு துறை துணை இயக்குனர், (Deputy Director of Prosecution) பயிற்சியளித்தார். போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின் புலன் விசாரணையை எவ்வாறு திறம்பட செய்யவேண்டும் எனவும், வழக்குகளின் விசாரணையில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி விளக்கம் அளித்தார்கள்.
மேலும் வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தருவதற்கு திறம்பட தொழில்நுணுக்கங்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களின் சந்தேக வினாக்களுக்கு தகுந்த விளக்கம் அளித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் என 75 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision