பெண் வழக்கறிஞரை மிரட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது.

பெண் வழக்கறிஞரை மிரட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது.

கடந்த (11.07.2024)-ம் தேதியன்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் மீது A.K.அருண் என்பவர் தனது ஜாதி பெயரை பாடலில் பாடியதாக கொடுத்த புகாரின் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவில் 34/2024 U/S 196(1), 353. 111(1)(2) BNS r/w3)1) (r)(s) of SC/ST (POA) Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது கைதின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பவர் மேற்படி சாட்டை துரைமுருகனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, ஊடகங்களில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை விமர்சித்து பேட்டி அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, இவரது ஆதரவாளரான திருப்பதி 33/24 த.பெ பாண்டியன், எம்.ஜி.ஆர் நகர், ஊமச்சிகுளம், சமயநல்லூர் மதுரை மற்றும் சிலர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை ஆபாசகவும். அருவருக்க வகையிலும் விமர்சித்து X-தளத்தில் பதிவுகளை பதிவிட்டார்கள். இதன் காரணமாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாநகரம், தில்லைநகர் காவல் நிலையத்தில் கடந்த 29.07.2024- . 547 / 2024 u/s 55, 61, 224, 351(2), 352, 353(2) BNS 67 IT ACT-ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 13.08.2024-ம் தேதியன்று மேற்படி திருப்பதி என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் கடந்த (18.09.2024)-ம் தேதியன்று நீதிமன்றத்தில் பிணையம் பெற்று, (24.09.2024)-ம் தேதி முதல் 3 வாரங்கள் தில்லைநகர் காவல் நிலையத்தில் கையொப்பமிட, நிபந்தனை பிணையில் வெளிவந்துள்ளார். தற்சமயம் தில்லைநகர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தங்கிகொண்டு, அவர்கள் ஆதரவுடன் 11 நாட்கள் கையொப்பமிட்டுள்ளார்.

இச்சமயத்தில், நிவாஷினி 27/24, க/பெ ராம்ஜி, நெ. 5/311, மேலத்தெரு, ஆலத்துடையான்பட்டி, துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம் என்பவர் தற்போது, சென்னை கோயம்பேட்டில் உள்ள இரமணியம் அப்பார்ட்மெண்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாகவும், தனது கணவர் நிவர் கேப்ஸ் என்ற பெயரில் கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாகவும் தெரிகிறது. மேற்படி நிவாஷினியின் கணவரிடம் எதிரி திருப்பதி கடந்த ஒரு வருடமாக டிரைவராக வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 03.10.2024-ம் மேற்படி வழக்கறிஞர் நிவாஷினி மற்றும் அவரது கணவர் சொந்த வேலை காரணமாக சொந்த ஊரான துறையூருக்கு வந்துவிட்டு. சென்னைக்கு செல்லவேண்டி, துறையூர் பேருந்து நிறுத்தம். அண்ணாசிலை முன்பு வந்து கொண்டிருந்தபோது. மேற்படி திருப்பதி என்பவர் காரை வழிமறித்து, "நீ ஒரு வழக்கறிஞராக வேலை செய்து கொண்டு, உன்னிடம் வேலை செய்த என்னை பெயில் எடுக்க வக்கு இல்லை என் கட்சிகாரர்கள் தான் டி என்னை பெயில் எடுத்தாங்கள்.

உனக்கு பாதிப்ப ஏற்படுத்தி காட்டட்டா, உங்களை சாந்த ஒருத்தங்கள் 37 நாள் சிறையில வச்சா அதோட வலி என்னான்னு அப்ப தெரியும், மேலும் உலக தமிழர் ஏத்துக்கள், உங்க மேலதான் கோவம், 10-20 பேர்ன்னு தான் நினைக்காதிங்க, இது பெரிய பஞ்சாயத்து பலன் அனுபவிக்க வேண்டும் நீங்க Business Chennai -ல பண்ண முடியாது, நேருல வந்து பாத்துக்கிறேன்" என்று கூறி பெண் என்றும் பாராமல் மிகவும் அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டதாகவும், அதன் பிறகு மீண்டும் நிவாஷினி சென்னை சென்ற பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாஷினியையும் அவரது கணவரையும் மிரட்டியதாகவும், நிவாஷினி (04.10.2024)-ம் தேதி துறையூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில்

துறையூர் காவல்நிலைய குற்ற எண் 268/2024 U/S 126(2), 296(b), 74. 351(2), BNS r/w 4 of TNWH ACT வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருப்பதியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision