திருச்சி மாவட்டத்தில் 2.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
திருச்சி மாவட்டத்தில் 1,569 மையங்களில் 2.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு. திருச்சி பெரிய மிளகுப்பாறையிலுள்ள நகா்நல மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து அவா் கூறுகையில்
திருச்சி மாவட்ட கிராமப்புறங்களில் 1,279 மையங்களில், திருச்சி மாநகராட்சியில் 247, துறையூா் நகராட்சியில் 20, மணப்பாறை நகராட்சியில் 23 என மொத்தம் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முக்கிய கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையம், சுற்றுலாத் தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராமப்புறங்களில் 1,51,608 குழந்தைகளுக்கு, நகா்புறங்களில் 83, 156 குழந்தைகளுக்கு, இடம் பெயா்ந்து குடியிருப்போா் மற்றும் நாடோடிகளின் 382 குழந்தைகள் என மொத்தம் 2,35,146 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்றாா் .
நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், நகா்நல அலுவலா் ம. யாழினி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் காஞ்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO