திருச்சி அரசு மருத்துவமனையில் உலக நிமோனியா தினம்

திருச்சி அரசு மருத்துவமனையில் உலக நிமோனியா தினம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கி ஆ பெ வி அரசு மருத்துவக் கல்லூரி சார்பாக குழந்தைகள் நலத் துறையின் மூலம் உலக நிமோனியா தினம் 12.11.22 அன்று கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் நேரு அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நிமோனியா குறித்து விழிப்புணர்வை பெற்றோர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் ஏற்படுத்தினார்.

நிமோனியா பரவும் விதம் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கான தடுப்பூசியை உரித்த நேரத்தில் போடுவதன் மூலம் நிமோனியா வருவதை தடுக்கலாம் என்பதை வலியுறுத்தினார்

அவரைத் தொடர்ந்து பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் பேராசிரியர் மருத்துவர் அருண் ராஜ் அவர்கள் நிமோனியா வராமல் தடுக்க முக கவசம் கை சுத்தம் தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவ மாணவர்களுக்கு நிமோனியா குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய நிரலாக பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நலத்துறையின் பேராசிரியர் மருத்துவர் சிராஜுதீன் நசீர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய குழந்தைகள் நலக் குழுமம் திருச்சி பிரிவினை சேர்ந்த நிர்வாகிகள் ,
குழந்தைகள் நலத்துறையின் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள், முதுநிலை மாணவர்கள், இளநிலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO